நாகார்ஜூனா 100

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, ஹீரோவாக 99 படங்களில் நடித்துள் ளார். தனது 100ஆவது படத்திற்காக பல்வேறு இயக்குநர்களை அணுகியவர், இறுதியில் இவர் அசோக் செல்வன் நடித்த ‘"நித்தம் ஒரு வானம்'’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக்கை கமிட் செய்திருந்தார்.    இந்த சூழலில் சசிகுமார் நடித்து 2023ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘"அயோத்தி'’ பட தெலுங்கு ரீமேக் உரிமையை நாகர்ஜூனா வாங்கியுள்ளா ராம். இதனால் அவரது 100வது படம் அயோத்தி ரீமேக்காக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இரண்டு விதமான பதில்கள் தெலுங்கு வட்டாரத்தில் கிடைக்கின்றன. ஒன்று 100வது படம் வேறு ஒரு கதை என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பதில் அயோத்தி படக் கதையைத்தான் ரா.கார்த்திக் இயக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். விரை வில் நாகர்ஜூனா 100-ஆவது படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் சிக்னல்!

Advertisment

சமீபகாலமாக தமன்னா, நாயகியாக நடித்த படங்களைவிட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் தமன்னாவை அணுகும் இயக்குநர்கள் பாடல் வாய்ப்பிற்காகவே கேட்டு வருகிறார்கள். இதற்கு தமன்னா, அதிக சம்பளம் கேட்டாலும் அதனை பெற்றுத்தரத் தயாராக வுள்ளார்கள். அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகிவரும் "தி ராஜாசாப்'’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட படத்தின் இயக்குநர் மாருதி தமன்னாவை அணுகி யுள்ளார்.  பிரபாஸுடன் ‘"பாகுபலி'’ படத்தில் ஜோடி போட்டுவிட்டு எப்படி நடனமாட முடியும் என யோசிக்கிறாராம் தமன்னா. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஏற்கனவே நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதிகுமார் உள்ளிட்ட நடிகைகள் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்ற கோணத்திலும் யோசிக்கிறாராம்.

cinema

தமிழில் வேடன்!

Advertisment

மலையாளத்தில் ராப் பாடகராக புகழ்பெற்ற ‘வேடன், சமீபகாலமாக ‘மீ டு’ விவகாரம், போதைப்பொருள் விவகாரம், அரசியல் கருத்து விவகாரம் என பரபரப்பாக பேசப்பட்டார். இதன்மூலம் இன்னமும் பிரபலமடைந்த வேடன், தொடர்ந்து மோலிவுட்டிலே பயணித்த நிலையில்... தற்போது கோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க வுள்ளார். "கோலிசோடா' பட இயக்குநர் விஜய்மில்டன், புதிதாக இயக்கும் படத்தில் இரண்டு பாடல் களை அவர் எழுதி பாடவுள்ளார். ஏற்கனவே சமீபத்தில் எழுந்த சர்ச்சையின் போது வேடனுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட குரல்கள் ஒலித்தன. இதனால் இவரது தமிழ் சினிமா எண்ட்ரி ரசிகர்களைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மீண்டும் மகிழ்ச்சி! 

"மேயாத மான்', "ஆடை' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார், சமீபகாலமாக "மாஸ்டர்', "விக்ரம்', "லியோ' படங்களில் ரைட்டர்களில் ஒருவராகவும் பணிபுரிந்தார். "லியோ' பட விழாவில் இவர் கூறிய சில கருத்து சர்ச்சையாக மாற, அதன் விளைவாக ஏற்கனவே கமிட்டான சில படங்களில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சைக்குப் பிறகு அவர் புதிதாக எந்த படங்களிலும் இயக்குநராக ஒப்பந்தமாகவில்லை. இருப்பினும் ரவிமோகன் நடிக்கும் "கராத்தே பாபு'’, கார்த்தி நடிக்கும் ‘"சர்தார் 2'’ ஆகிய படங்களில் ரைட்டராக வேலை பார்த்துள்ளார். தற்போது ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரிக்க ‘"ரெட்ரோ'’ படத்தில் வில்லனாக நடித்த விது நாயகனாக அறிமுகமாகிறார். மீண்டும் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரத்னகுமார் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம்!

-கவிதாசன் ஜெ.